புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் காலமானார்பிரித்தானிய  தலைநகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கிய ஊடக அமைப்பின் அனைத்துலக தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும் அந்த அமைப்பின் நிர்வாக பணிப்பாளர்களில் ஒருவராகவும் ஆரம்பகாலம் முதல் செயற்பட்ட தம்பிப்பிள்ளை குகதாசன டென்மார்க்கில் காலமாகியுள்ளார்.

இந்தநிலையில், குகதாசன் தனது சுகயீனம் காரணமாக கடந்த 25 ஆந் திகதி டென்மார்க்கில் காலமானதாக அவரது ஊடகத்துறை நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இலங்கையில்  தமிழ் ஊடகமொன்றில் பணிபுரிந்த அவர் இலங்கையின் இனப்பிரச்சனை காரணமாக புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்த போதும் தனது ஊடகப்பணியைத் தொடர்ந்திருந்தார்.


தமிழ் செய்தியாளர்

அத்தோடு, கடந்த 2006 ஆம் ஆண்டு லண்டனில் (London) அனைத்துலக தமிழ் செய்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு பக்க பலமாக செயற்பட்ட குகதாசன் இலங்கையில் தமிழ் ஊடகதுறை மீதான அடக்கு முறைகள் மற்றும் தமிழ் ஊடகர்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக அனைத்துலக தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் சார்பான அறிக்கையிடல்களை அனைத்துலக சமுகத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார்.


மேலும், தம்பிப்பிள்ளை குகதாசனின் மரணத்துக்கு புலம்பெயர் ஊடகத்தளத்தில் உள்ள மூத்த ஊடகர்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை