மட்டக்களப்பில் வீதியில் நிற்கும் யானைகளால் அச்சத்தில் வாழும் மக்கள்மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவான் கிராமத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக பெரும் அவதியுறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த பகுதியின் வீதியில் நிற்கும் யானைகளால் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட தோட்டத்திற்கு வேலை செய்யச் செல்லும் விவசாயிகள் என அனைவரும் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. 

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் தாக்குதல் காரணமாக இந்த வருடம் மாத்திரம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், தினம் தினம் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக அச்சத்துடன் வாழவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.


எனவே, இது குறித்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் கவனம் செலுத்தி தங்களது உயிர்களை பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை