விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தேடிய ஐவர் கைது!கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி மற்றும் ஆசிரியர் உட்பட ஐவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று(07.06.2024) இரவு இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையில், பொலிஸ் தலைமையகத்தில் செல் IG பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2 இலத்திரனியல் ஸ்கேனர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.


அத்துடன், சம்பவத்தில் கைதானவர்கள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், குறித்த சந்தேக நபர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இன்று(08-06-2024) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை