இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் - இலங்கை ஜனாதிபதி ரணில்இலங்கை ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க இந்திய  வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அதிபர் ரணில் விக்ரமசிங்க புதுடெல்லி சென்றிருந்த நிலையில் இன்று (10-06-2024) இந்த சந்திப்பு நிகழ்ந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு
முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை  இன்று காலை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.


இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை