கொழும்பில் சற்றுமுன் துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு!கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரிய நகரில் இன்று(08-07-2024)துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல சிங்கள பாடகி கே. சுஜீவா என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஆபத்தான நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


துப்பாக்கி சூட்டில் பிரபல கோடிஸ்வரரும் கிளப் உரிமையாளர் கிளப் வசந்தா உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம், அதனை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை