இதுதான் கதிர்காம முருகன் கோயில் கொடியேற்றம்


கதிர்காமத்தில் ஆடி மாதம் நடைபெறும் வருடாந்த திருவிழாவின் போது முருகன் கோயிலில் சேவல்_கொடி ஏற்றப்படும்.பின்பு அக் கொடி தெய்வானை அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டு பின்பு வள்ளியம்மன் கோயிலின் அருகில் உள்ள பக்கீர் மடத்தில் இருக்கும் கொடிக் கம்பத்தில் கட்டப்படும்.1965 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த வழக்கமே கடைப்பிடிக்கப் பட்டுள்ளது.

இதுதான் கதிர்காம முருகன் கோயில் கொடியேற்றம். இந்த பாரம் பரியம் கடந்த பல வருடங்களாக மாற்றப் பட்டுள்ளது. தற்போது கதிர்காம கொடியேற்றம் என்ற பெயரில் பக்கீர் மடத்தில் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்ட பச்சை நிறக் கொடியே ஏற்றப்படுகிறது. இது கதிர்காம முருகனுக்குரிய கொடி அல்ல.
இக்கொடி பக்கீர் மடத்திற்குரியதாகவோ, பக்கீர் வம்சத்திற் குரிய தாகவோ இருக்கலாம். இக்கொடியை பக்கீர் மடத்தில் ஏற்றுதில் இந்துக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் தாராள மாக ஏற்றலாம். ஆனால் கதிர்காம முருகன் கோயில் கொடியேற்றம் என்ற பெயரில் இக் கொடி ஏற்றப் படுவதிலேயே பிரச்சினை உள்ளது.


எனவே இங்கு இரண்டு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1) கதிர்காம முருகன் கோயில் கொடியேற்றம் முருகன் கோயிலில் ஏற்றப்பட வேண்டும்.
2) இக்கொடி முருகனுக்குரிய செம்மஞ்சள் நிறம் கொண்ட சேவல் கொடியாக இருக்க வேண்டும்.
இதுதான் கதிர்காம முருகன் கோயிலின் பாரம்பரியமிக்க கொடி யேற்றம். இப்பாரம்பரியம் 1965 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை கடைப்பிடிக்கப்பட்டு அதன் பின்பே மாற்றப் பட்டுள்ளது. ஆனால் இத்தனை காலம் வரை இலங்கையில் உள்ள சைவப் பெரியார்களும், #இந்து_அரசியல் தலைவர்களும் ஏன் இதைக் கண்டுகொள்ள வில்லை?
கதிர்காமத்தில் மீண்டும் சேவல் கொடி ஏற்றப்பட வேண்டும் என் பதே இந்துக்களின் நியாயமான வேண்டுகோள்.
புதியது பழையவை