கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு!அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் அதிகாரிகள், தமக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று (03-07-2024) குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.


அத்துடன், மீட்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த மோட்டார் சைக்கிள் வேறு பகுதியில் இருந்து ஏதேனும் குற்றச் செயலுக்கு கொண்டுவரப்பட்டதா அல்லது களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை