தம்பலகாமம் - கூட்டாம்புளி என்னும் இடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (20-07-2024)ஆம் திகதி மாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இருந்து குறித்த நபருடையதாக இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை ஒன்றும் மீட்கப்பட்டள்ளது.
குறித்த நபர் 1971ஆம் ஆண்டு பிறந்தவர் எனவும் அன்புவழிபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.