பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இன்றைய (24-07-2024) அமர்வின் போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உத்தரவு
அந்தவகையில், நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.