மட்டக்களப்பு பிராந்தியத்தில் சேவையாற்றவென புதிதாக நியமிக்கப்பட்ட 30 வைத்தியர்களின் சேவை நிலையம் குறிப்பிட்ட நியமனக்கடிதங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. இரா. முரளீஸ்வரன் அவர்களினால் வழங்கிவைக்கட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் (12-08-2024) திங்கள் கிழமை அன்று நடைபெற்றிருந்த இந் நிகழ்வில் பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகள் மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க கிளையின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இவ் நிகழ்வை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr. சிறிவித்தியன் அவர்களின் ஒருங்கிணைத்திருந்தார்.
புதிய வைத்தியர்களுக்கான வரவேற்பினையும் , மாவட்ட சுகாதார சேவையின் விரிவான அறிமுகத்தினையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இரா. முரளீஸ்வரன் அவர்களும், அதனை தொடர்ந்து, பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகளின் துறை சார் அறிமுகமும் இடம்பெற்று, புதிதாக நியமனம் பெற்ற வைத்தியர்களுடன் அரசாங்க மருத்துவர்கள் சங்கதினருடான கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.