மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.
15 ஐஸ் போதைப் பொருள் விற்பனையாளர்கள் உட்பட கசிப்பு , திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் 350 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி, கசிப்பு விற்பனை, மற்றும் வீடு உடைத்தல் மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 44 பேரும் அடங்கலாக 59 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.