மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 15 சிறுமியை காதலித்து வந்த 19 வயது இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியின் வீட்டிற்கு இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று அதனை மறைவிடம் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு மதிலால் ஏறி வீட்டிற்கு சென்று சிறுமியுடன் காதலில் ஈடுபட்டுபிட்டு திரும்பி வந்து சென்றுவரும் நிலையில் அதனை அவதானித்த இனம் தெரியாதோர் அவர் வழமைபோல மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு காதலியிடம் மதிலால் சென்ற திரும்பிவரும் போது மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கியுள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை தொடர்பான விசாணையில் குறித்த இளைஞன் காதலியான 15 வயது சிறுமியின் வீட்டிற்கு இரவில் களவாக சென்றுவருவதாக அறிந்ததையடுத்து 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.