தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் இன்று (29-08-2024) ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலில் எட்டப்பட்டுள்ளது.
நீண்ட நேர விவாதம்
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் இன்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நீண்ட விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலந்துரையாடலின் இறுதியில் ஒருமித்த முடிவாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.