நேற்றய தினம் சக ஊடக நண்பர் சரணவன் தொடர்பாக பாரா ளுமன்றத்தில் அச்சுறுத்தி பேசியதை அவதானிக்க முடிந்து .
சில விடயங்களை உங்களுக்கு தெளிவு படுத்தலாம். என விரும்புகின்றேன்.
அமரர் ஜோசப்பராஜ சிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன் அவர் ஒரு ஊடகவியலாளர் ஆனால் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது உலகறிந்த உண்மை .
அதிலும் அவர் சுடப்பட்டதற்காக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முதல் சி. சந்திரகாந்தன் ஆகிய நீங்கள் சுமார் 5 வருஷம் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு இறுதியில் பல குளறுபடிகளுக்கு மத்தியில் விடுதலையாகி வெளிவந்தீர்கள்.
அப்போதும் ஜோசப் பரராஜசிங்கம் ஒரு ஊடகவியலாளராக இருந்தும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கொலையாச்சுறுத்தல் விடுகப்பட்டு இருந்தும் இறுதியில் படுகொலையும் கொலையும் செய்யப்பட்டார்.
என்பது அனைவருக்கும் தெரியும் .
ஆனால் நேற்றைய தினமும் தனக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தன்னுடன் பல புகைப்படங்கள் எடுத்தும் உங்களது கட்சியில் அவருக்கான பல பொறுப்புகள் வழங்கப்பட்ட ஒருவர் பாலியல் தொந்தரவு தொடர்பாக கைது செய்யபட்டடுள்ளார் என்பது பாராளுமன்றத்தில் பேசப்பட்டு மட்டக்களப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் சென்று அவருக்கு விளக்கம் மறியல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனக்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போன்ற ஒரு கதையாக தான் பார்க்க முடிகின்றது.
ஆனால் இந்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பாக பல ஊடகங்களில் பல செய்திகள் வெளியிடப்பட்டு இருந்த போதிலும் அதை நீங்கள் மறுத்துள்ளதுடன்
குறிப்பாக வடக்கிலிருந்து கிழக்குக்கு வந்து கிழக்கில் பல ஊடகங்களுக்கு செய்திகளை சேகரித்து வெளியிட்டு வரும் சக ஊடக நண்பர் சரவணன் அவர்களை பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராகவும் வசைபாடி உள்ளீர்கள்
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்கு சோரம் போகாத ஊடகவியலாளர்களை குறி வைத்து ஏதோ ஒன்றும் தெரியாத சிறுபிள்ளை மாதிரி கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில ஊடகவியலாளர்கள் துணிச்சலாக தங்களது கடமைகளை செய்து வருகின்றார்கள்.
உங்களுக்கு எதிராக ஊடக துறையிலும் பாராளுமன்றத்திலும் பல பிரச்சினைகளை முன்வைத்த ஒருவரரே ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதில் சந்தேக நபராக நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள் ஐந்து வருடம் சிறை தண்டனை அனுபவித்தது தாங்கள் அறிந்தது.
ஆனால் உங்களுக்கு சோரம் போகாத ஊடகவியலாளர்களை நீங்கள் நசுக்குவதற்கு இந்த உயரிய சபையான பாராளுமன்றத்தில் பேசுவதால் உங்களுக்கு கிடைக்கப் போவது என்ன?
உங்களது பிரதேசத்தில் நடக்கின்ற பல பிரச்சனைகளுக்கு உங்களுக்கு ஒரு முடிவு எடுத்து கொடுக்க முடியவில்லை?
உதாரணமாக மாதவன மயிலத்தமடு பண் ணையாளர்கள் பிரச்சனை,இல்மனைட் பிரச்சனை, இரால் பண்ணை பிரச்சனை மக்கள் உங்களை செருப்பாள் அடித்து விரட்டியது உங்களுக்கு
ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இவ்வாறான பிரச்சினைகள் மாவட்டத்தில் இருக்கும் போது இவற்றை பாராளுமன்றத்தில் பேச முடியவில்லை ஆனால் உங்களது சகா ஒருவருக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக விளக்க மறியல் வைக்கப்பட்டதை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசியதை பேசுவதற்கு நேரம் இருக்கின்றதா?
இனிவரும் காலங்களிலாவது மட்டக்களப்பு மக்களுக்குத் தெரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் செய்யும் அபிவிருத்திகள் என்ன என்று. உதாரணமாக சொல்ல போனால் கம்பியில்லா வீதி உலகத்திலேயே சாதனை புத்தகத்தில் எழுத வேண்டியது.
ஒரு மலைக்கு கூட தாக்கு பிடிக்காதளவு வீதி, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தால் அதற்கு ஒரு வீதி போடுவது என்று இன்னும் பல உள்ளது. .......
மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை அனுபவிக்கும் நீங்கள் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் விரல் நீட்டுவதை நிறுத்தி விடுங்கள் .
உங்களது நடவடிக்கை மிக கேவலமும் அருவருப்பாக உள்ளது உங்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டால் 10 லட்சம் ரூபாய் காசு கொடுத்து எங்களை சுடச் சொல்வீர்கள் அது தெரிந்த விஷயம் கொலை என்பது உங்களுக்கு கைவந்த கலை.
ஆகவே நீங்கள் மட்டக்களப்பில் நடக்கும் சம்பவங்களை செய்தி அறிக்கை இடும் ஊடகவியலாளர்களை பாராளுமன்றத்தில் கொண்டு பேசுவதை நிறுத்திவிட்டு உங்களுக்காக வழங்கப்பட்ட அமைச்சுப் பதவி எவ்வாறு செய்யலாம் எவ்வாறு நாம கொள்ளை அடிக்காமல் மக்களுக்கு சேவை செய்யலாம் எவ்வாறு நாங்கள் இளம் சமூகங்களை கொண்டு நல் பாதையில் செல்லலாம் என்று யோசியுங்கள்.
நீங்கள் நினைக்க வேண்டாம் இனிவரும் காலங்களில் மக்கள் மடையர்களாக இருப்பார்கள் என்று இனிவரும் காலங்களிலும் இனிவரும் தேர்தல் காலங்களிலும் உங்களுக்கு மக்கள் தகுந்த பாடம் செலுத்து தயாராக இருக்கின்றார்கள்.
என்பதை மறக்க வேண்டாம்.
ஆகவே உங்களுக்கும் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு எந்தவித சம்பந்தமில்லை என்று எங்களுக்கும் தெரியும் ஏனென்றால் பாதிக்கப்பட்டது அந்த ஆசிரியரும் ஒரு குடும்பம் நீங்களோ இல்ல உங்களது குடும்பமோ அல்லது கட்சியோ இல்லை.
ஆகவே ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் விரல் நீட்டுவதை நிறுத்தி விடுங்கள் உங்களது சன்னங்களுக்கும் தோட்டாக்கலுக்கும் நாங்கள் பயந்தவர்கள் அல்ல.
இன்று காலம் மாறி வந்துள்ளது எதிர்வரும் காலங்களில் நீங்கள் கற்க வேண்டியது நிறையவே இருக்கு அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் அறுக்கப் போகும் கிடா நீங்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆகவே தயவு செய்து செய்தியாளனை செய்தி சேகரிக்க நீங்கள் அனுமதியுங்கள் கடந்த காலங்களில் நான் மாவட்டத்தில் இருக்கும்போது எவ்வளவு எதிர்ப்புக்களையும் எவ்வளவு துன்பங்களையும் எவ்வளவு அச்சுறுத்தல்களையும் எனக்கு விடுத்திருந்தீர்கள்?
ஆனால் உங்களுடைய சிறு பிள்ளை அரசியல் ஒரு போதும் சொல்வது உ+ம் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது போல அதுவே உங்களுக்கும் நடக்கும் .
ஆகவே ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் நீங்கள் விரல் நீட்டுவதை நிறுத்தி விடுங்கள் உங்களது பாராளுமன்றத்தில் பேசுவதற்கு பல விடயங்கள் இருக்கின்றது அவற்றை பேசுங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணிகளை விற்பதற்காக நீங்கள் எடுக்க நடவடிக்கை மண்னுரிமம் வழங்குவதற்காக நீங்கள் எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களை துன்புறுத்த அச்சுறுத்த கடத்த போட்டு தள்ள நீங்க எடுக்க நடவடிக்கைகள் அந்தக் காலம் கடந்து விட்டது.
தற்போது இளம் சமுதாயம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது ஆகவே உங்களது அரசியல் மக்கள் சார்ந்து முன்னெடுங்கள்.
இதை எழுதுவதற்காக நீங்கள் என்னை என்ன செய்வதற்கு முற்ப்பட்டாலும் உங்களோட அச்சுறுத்தள்களுக்கு நாங்கள் அஞ்சப் போவதுமில்லை அடிபணிய போவதும் இல்லை.
ஆனால் மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களை கேவலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று அன்பாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
நன்றி
சசி புண்ணியமூர்த்தி
சுயாதீன ஊடகவியலாளர்