பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் - நன்றி தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுனர்



பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டாயமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டவர்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் (10-09-2024) கட்டாயமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கே அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், மிகுதி 350 ரூபா பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (Ceylon Workers' Congress) உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இன்று முதல் 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை