பாடசாலையில் தரம் 11 இல் கல்விகற்றுவரும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை (27-09-2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் வசித்துவரும் 16 வயது சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று சென்றுள்ள நிலையில் அவரின் அம்மம்மாவின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
அதேவேளை சிறுமியின் பக்கத்து வீட்டு 16 வயது சிறுவனின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் அவரின் தாயாரும் வெளிநாட்டில் வேலை வாய்புக்காக சென்றுள்ள நிலையில் அம்மம்மாவின் பாதுகாப்பில் இருந்துவரும் சிறுவன் பாடசாலையில் பக்கத்து வீட்டு சிறுமியுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்துள்ள நிலையில் சிறுவனின் வீட்டிற்கு கல்வி கற்பதற்காக சிறுமி சென்று வந்துள்ள நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட காதல் காரணமாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையிட்டு அவரை நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில் சிறுமி 2 மாத கற்பணியாகியுள்ளது தெரியவந்ததையடுத்து வைத்தியர் பொலிசாருக்கு அறிவித்த நிலையில் சிறுமியை கர்பணியாக்கிய 16 வயது சிறவனை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.