350 சிறைக் கைதிகளுக்கு நாளை சிறப்பு அரச மன்னிப்பு!



கைதிகள் தினத்தை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 350 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் விசேட அரச மன்னிப்பு வழங்கப்படுமென சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இதன்படி நாளை, சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, உரிய நிபந்தனைகளுக்கு அமைய தகுதி பெற்ற 350 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, கைதிகள் தினத்தை முன்னிட்டு, கைதிகளை வெளிப்படையாகப் பார்ப்பதற்கு விசேட வாய்ப்பு அல்லது திறந்தவெளிச் சந்தர்ப்பம் வழங்கவும் சிறைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
புதியது பழையவை