இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்கு தடை




2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் இன்று (11-09-2024) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை அச்சடித்து விநியோகிக்கவும் தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


மேலும், பரீட்சை கேள்விகள் அல்லது ஒத்த உள்ளடக்கத்தை வழங்குவதாகக் கூறும் மின்னணு, அச்சு அல்லது சமூக ஊடகங்கள் மூலம் சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் அல்லது விளம்பரங்களை வெளியிடுவது அல்லது விநியோகிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.


இந்த ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் 15  அன்று காலை 09.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ளது.

நாடு தழுவிய u ரீதியில் 2,649 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்த விதிகளை மீறும் எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது குழுவோ அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திடம் முறைப்பாட்டை பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை