மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை



மட்டக்களப்பு மாவட்டம்  போரதீவுப்பற்று 40ஆம் கிராமம், வம்மியடியூற்று பகுதியில் இன்று(07-09-2024)ஆம் திகதி  விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதியில் டெங்கு நோயாளர் ஒருவர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி Dr. தெ. மிருநாளன்  அவர்களின் ஆலோசனைக்கிணங்க
அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் இ.ராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் பொது சுகாதார  வெளிக்கள உத்தியோகத்தர்கள் தெளிகருவி இயக்குனர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



இதன்போது 213 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டதோடு அதில் 4  இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் இனம் காணப்பட்டதுடன்
37 இடங்கள் நுளம்பு பெருகக்கூடியதாகவும் காணப்பட்டது.

 அவற்றில் 31 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தலும் வழங்கப்பட்டது. 

மேலும் அப்பகுதி மக்களுக்கு  சுயநல கல்வி விழிப்புணர்வும் அழிக்கப்பட்டது.

புதியது பழையவை