அரச ஊழியர்கள் குறித்து வெளியான புதிய சுற்றறிக்கை



அரச ஊழியர்கள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்க தவறினால், குறித்த நாட்களுக்குப் பிறகு வரும் முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

பொது சேவைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகின்றமை கண்காணிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுச்சேவை ஆணைக்குழு 
இதன்படி, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.


ஒரு ஊழியருக்கு பதவி விலகல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் பிரிவு 216 இன் படி ஏதேனும் காரணங்கள் அல்லது விளக்கங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுளளது.

22 நாட்களுக்குள் பதவி ஏற்றல் 
அத்துடன், எதிர்காலத்தில் நாடு தழுவிய அரச சேவைகளின் சிறப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெறும் ஊழியர்கள், அவர்களின் நியமனக் கடிதத்தைப் பெற்ற நாளிலிருந்து 22 வேலை நாட்களுக்குள் தங்கள் புதிய பதவிகளை ஏற்க வேண்டும் என்று ஆணைக்குழு நிபந்தனை விதித்துள்ளது.


இதேவேளை ஒரு மாதத்திற்குள் பணிக்கு வராத அதிகாரிகளின் சிறப்பு தர பதவி உயர்வு இரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று பொதுச் சேவை ஆணைக்குழு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை