இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21-09-2024) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
மட்டகளப்பிலுள்ள அம்பலாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் அரியநேத்திரன் தமது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
வேட்பாளர் அரியநேத்திரன் வாக்களித்து விட்டு அனைவரும் அமைதியான முறையிலே தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும்,தேர்தல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அசம்பாவிதங்களை மேற்கொள்ளாதிருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.