துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு!



கல்கிசை படோவிட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் பிரயோகத்தினை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படோவிட நான்காம் கட்டப் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கல்கிஸ்ஸ – படோவிடட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை