வட்டார மக்களுக்கும் மாவட்ட மக்களுக்கும் பெருத்த அபகீர்த்தியை ஏற்படுத்திய மட்டக்களப்பு மாநகர முன்னாள் முதல்வர் !
இலங்கையி ல் மாநகர சபைகள் 24 அவற்றில் வடகிழக்கில் நான்கு மாநகரசபைகள்அவைகள்யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,கல்முனை,அக்கரைப்பற்று ஆகியவையாகும். யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு ஆகிய மாநகர சபைகள் நீண்டகாலம் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் ஆளுமைக்குள் உட்பட்டே இருந்தது.
யாழ்.மாநகரசபையின் முன்னாள் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வேண்டிமாங்குளத்தில்தனதுபிரச்சாரத்தை ஆரம்பித்தார். மட்டக்களப்பின் முன்னாள் முதல்வர் அவர்களும் பொதுவேட்பாளருக்குஅனுசரணையாகசெயற்படுவார் என காத்திருந்த நிலையில் கல்லடி பிரதேசமக்களின் காதுகளில் பழுக்காச்சிய கம்பியை செருகியுள்ளார் .
தமிழீழ ஆயுதப் போராட்ட வரலாற்றில் கல்லடிப் பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையிலான பிரதேச மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். பதிவுகளின் பிரகாரம் இப் பிரதேசத்தில் 98 பேர் மாவீரர்களாக உள்ளனர் .(இறுதி யுத்தத்தின் தரவு இல்லாத நிலையில் )
கல்லடி: 60
நொச்சிமுனை: 0 8
நாவற்குடா: 16
மஞ்சந்தொடுவாய்: 08
நாவலடி: 0 6
தரப்படுத்தல் .குடியரசு அரசியல் அமைப்பு, தமிழர் மீதான அடக்குமுறை அதிகரித்த 1970 பிற்பட்ட காலப்பகுதியில் முதன் முதலாக கிழக்கில் 1976இல் நாவற்குடாவில் வைத்துஅரசபேருந்து தீக்கிரையாக்கப்பட்டது .ராஜ்மோகன் ,பரமதேவா ஆகியோர் இக் காரியத்தை மேற்கொண்டனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற பிரதிநிதியாகவும் அரசியல் அதிகாரியாகவும் இருந்த திரு ராஜன் .செல்வநாயகம் அரசுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்த தமிழரசுக்கட்சிக்கும்,தமிழ் இளைஞர்களுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்டார். இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் முடங்கி அவர்கள் ஒரு கூட்டத்தினையும் நடந்த முடியாத சூழல் இருந்தது இதை உடைத்தெறிந்த பெருமை அப்போதைய கல்லடிப் பிரதேச தமிழ் இளைஞர்களையே சாரும் .
1976 இல் கல்லடி சந்திக்கு அருகில் , பட்டிருப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு .கணேச லிங்கம் அவர்களின் வளவில் தமிழரசுக்கட்சி கூட்டமொன்றை நடாத்த பிரதேச இளைஞர்கள் ஒழுங்கும் பாதுகாப்பும் மேற்கொண்டனர். அக் கூட்டத்துக்கு அப்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் அ . அமிர்தலிங்கம் உட்பட பலர் வருகை தந்தனர். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு அரணாக கல்லடி பிரதேச தமிழ் இளைஞர்கள் செயல்பட்டனர்.
கடந்த உள்ளுராட்ச்சி மன்றத் தேர்தலில் (2018.02.10) மட்டக்களப்பு மாநகர சபையின் கல்லடிப்பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையிலான ஆறு வட்டாரங்களில் மஞ்சந்தொடுவாய் 16ம் வட்டாரம் இஸ்லாமியரை பெரும் பான்மையாகக் கொண்ட வட்டாரம். ஏனைய ஐந்து வட்டாரங்களிலும் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து மீண்டும் தமது தமிழ்த் தேசிய உணர்வை நிரூபித்து காட்டினார்.கல்லடி பிரதேச மக்கள்.கல்லடி பிரதேச மக்களால் தேர்தல் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் மாநகர முதல்வர் 1332 வாக்குகளை பெற்று 13 ம் வட்டாரத்தில் வெற்றி பெற்றார். தமிழரசுக்கட்சியின் ஞானசூரியம் சதுக்கம் வேட்பாளர் 1430 வாக்குகள், இருதயபுரம் வேட்பாளர் 1414 வாக்குகள் , அரசடி வேட்பபாளர் 1333பெற்ற போதும் கல்லடியில் 1332 வாக்குகளை பெற்ற வரை மாநகர முதல்வராக்குவதற்கு கல்லடி பிரதேச கல்விச் சமூகம் ஓரணியில் நின்றது
தமிழரசு க் கட்சியில் 40 வருட காலம் பயணித்த கருவேப்பங்கேணி வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவராஜா அவர்களை முதல்வர் பதவிக்கான நபராக தமிழரசுக் கட்சி தீர்மானித்து இருந்தது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய பற்றாளர் துணையுடனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் விருப்புடனும் கல்லடிப் பிரதேசம் மக்களின் தேசிய உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநகர முதல்வரானார் சரவணபாவன்
தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் தமிழ் தேசிய பற்றாளர்கள் என அடிக்கடி முகநூலில் பதிவிடும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தங்கள் பிரதேச மக்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மனத்தில்கொள்ளாது தமிழ்ப்பொதுப் வேட்பாளரை விமர்சிப்பதும் அவருக்கான ஆதரவை மறுப்பதும் பிரதேச மக்களுக்கு இவர் செய்யும் பெரும் அநீதியாகும்
சிங்கம் வேட்டைக்குசெல்லும் போது சிறு நரிகள் அவற்றைத் தொடருமாம் சிங்கம் வேட்டையாடி உண்ட மிச்சங்களை உண்ண நரிகள் அலைவது போல் தமிழ்த்தேசிய விரோதிகளின் பின் இவர் செல்வது பதவிகளுக்கே! இது இவரை அரசியல் வானில் ஆளாக்கி அழகு பார்த்த மக்களுக்கும் கல்லடி பிரதேச த்துக்கும் செய்யும் பச்சைத் துரோகம் ஆகும் .
ஜீவராஜ்