சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு!



இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியாவா தெரிவித்துள்ளார்

நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் ஸ்திரதன்மை வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தினை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு நிலையான பங்குதாரர்களாகவும் பணியாற்றுவதற்கு  தாம் தயாராக உள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை