கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று (05-10-2024) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.
நேற்றும் இன்றும் (5ம் மற்றும் 6ம் திகதிகளில்) கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதுடன் பட்டதாரிகளின் பட்டங்களையும் உறுதி செய்துள்ளார்.
அத்துடன், வரலாற்றில் முதல் தடவையாக அதிகூடிய எண்ணிககையிலான மாணவர்கள் இம்முறை பட்டம் பெற்றுள்ளனர்.
ஏறத்தாழ 2340 உள்வாரி, வெளிவாரி, கலாநிதி மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் இம்முறை பொது பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்க உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.