மட்டக்களப்பு விவேகானந்தபுரம் மாதிரிக்கிராம 3ஆவது வேலைத்த்திட்டம்



மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தினால், அகிலன் பவுண்டேசன் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும்
மாதிரிக்கிராம 3ஆவது வருட வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு (25-10-2024)ஆம் திகதி பி.ப 3 மணிக்கு விவேகானந்த புர பாமகள் வித்தியாலயத்தில் இடம் பெற்றன.

ஆரம்ப நிகழ்வானது அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்காக இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன்(JP.MAF) தலைமையில் இடம் பெற்றது.

விசேட அதிதியாக இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தலைவரும் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபகருமான மு.கோபாலகிருஸ்ணன்
கலந்துகொண்டார்.

வாழ்வாதார உதவிகள்,உயர் தரம் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கொடுப்பனவுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,வறியவர்களுக்கான அரிசிப்பொதிகள்,விசேட தேவையுடையவர்களுக்கான உதவிகள்,மருத்துவ சிகிச்சைகளுக்கான உதவிகள் சுயதொழில் உதவிகள் வழங்கப்பட்டன

விவேகானந்தபுரம் கிராமமான போரதீவுப்பற்று பிரதேசத்தில் பின்தங்கிய பகுதியென அடையாளப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தினால் இந்தக் கிராமம் தெரிவுசெய்யப்பட்டு மாதிரிக்கிராமம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


பிரதேசசெயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர்,கிராம உத்தியோகஸ்தர்,சமுர்த்தி உத்தியோகஸ்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ,கிராம அபிவிருத்தி சங்கம் ,ஆலய நிருவாகத்தினர்.மாணவர்கள்,பொதுமக்கள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

















புதியது பழையவை