ஜனாதிபதி தேர்தலும் சுயேட்சை சின்னங்களும்..!



17 சுயேட்சை வேட்பாளர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டனர்.

அவர்களில்.....       
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர்
சரத் கீர்த்திரத்ன காற்பந்து,கே.கே. பியதாச கணிப்பான், அஜந்தா டீ சொய்சா அன்னாசிப்பழம் , ஆனந்த குலரத்ன பதக்கம், அக்மீமன தயாரத்ன தேரர் கரும்பலகை,
சிரிப்பால அமரசிங்க டயர், சரத் பொன்சேகா லந்தர் , அந்தனி விக்டர் பெரேரா மோட்டார் பைக்,, முகம்மது இலியாஸ் சிரிஞ்,, மரக்கலம்மானகே பிரமசரி மூக்கு கண்ணாடி , அனுரா சிட்னி ஜயரட்ன பலாப்பழம், டி.எம். பண்டாரநாயக்க மேசை மின்விசிறி, மயில்வாகனம் திலகராஜா சிறகு , ரோஷான் ரணசிங்க கிரிக்கெட் மட்டை , பாக்கிய செல்வம் அரியநேத்திரன் சங்கு , சமிந்த அநுருத்த குதிரை லாடம்,ஆகிய சின்னங்களில் போட்டியிட்டனர். 

இந்த சின்னங்கள் ஐனாதிபதி வேட்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட கடந்த 2024, ஆகஷ்ட்,15, தொடக்கம் 2024,அக்டோபர்,22, வரை மட்டுமே குறிப்பிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் இந்த சின்னங்களை பாவிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தேர்தல் முடிவுற்றதும் தேர்தல் ஆணைக்குழு சின்னமாக மீண்டும் மாறும்.

அதன்படி கடந்த ஆகஷ்ட 22, க்கு பின்னர் ஏதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தமக்கு ஏற்கனவே இருந்த சின்னத்தை இரத்து செய்து மேற்குறிப்பிட்ட சின்னங்களில் ஒன்றை பெறமுடியும்

தேர்தல் முடிவு அறிவித்தபின்னர் சுயேட்சை சின்னங்கள் யாவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சொந்தமாகும்.

அவ்வாறு ஒருகட்சிக்கு மேல் பல கட்சிகள் விண்ணப்பித்தால் திருவுளச்சீட்டு மூலம் அந்த சின்னம் ஒரு கட்சிக்கு வழங்கப்படும்.

இதுதான் தேர்தல் சட்ட விதி..

தற்போது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி (DTNA)என்ற கட்சியின் செயலாளர் சங்கு சின்னத்தை தமக்கு ஏற்கனவே இருந்த குத்திவிளக்கு சின்னத்தை இரத்துச்செய்து சங்கு சின்னத்தை வழங்குமாறு விண்ணப்பித்து தேர்தல் ஆணைக்குவின் அவ்கீகாரத்துடன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிராக சுயேட்சை வேட்பாளரோ அல்லது வேறு தரப்புக்களோ ஆட்சேபனை தெரிவிக்க முடியாது.ஆட்சேபனை தெரிவித்தாலும் தேர்தல் ஆணைக்குழு அதனை ஏற்காது.
இதுதான் அதற்கான விளக்கம்

ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் நான் தமிழ் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட போது என்னை மிகவும் கீழ்த்தரமாவும், அவமானப்படும்படியாகவும் பலர் விமர்ணனங்களை கண்டபடி முன்வைத்தனர்.          
மடையன், முட்டாள், பேயன், துரோகி, பைத்தியகாறன்,விசரன்,மூடன், கோழிக்கடை மன்சூர், கோமாளி, கழிசறை, அயோக்கியன்,என பல கீழ்த்தரமான வார்தைகளால் அவமானப்பட்டேன்.                        

அதைவிட இது படுகுழியில் விழும் செயல், பொதுவேட்பாளரை தோற்கடிப்பேன் இவர் நாலாயிரம் அல்லது இருபதாயிரம் வாக்குகளை பெறமுடியாது அப்கடி ஒரு இலட்சம் வாக்குளை பெற்றால் தாம் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என சிலர் சூழுரைத்தனர், சவால் விட்டவர்கள் எல்லோரும் எதிர்பார்காமல் இலங்கையில் 5, ம் நிலையுல் 226343, வாக்குகளை பெற்றபோதுதான் பலர் ஆச்சரியம் அடைந்தனர்.

அந்த சங்கு சின்னத்தின் எழுச்சி, வெற்றி இப்போது ஒரு அரசியல் கட்சி அந்த சின்னத்தை தமது கட்சி சின்னமாக கேட்டு விண்ணப்பித்துள்ளது என்றால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழர்கள் தந்த என்க்கு தந்த அங்கீகாரம் என்பதுதான் உண்மை.

எனவே இப்போதாவது தமிழ் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட எனது முயற்சி முட்டாள்தனமோ, மடத்தனமோ இல்லை அது தமிழர்களின் வழங்கிய அங்கீகாரம் என்பதை உணர்ந்தால் நல்லது.

சங்கு சின்னம் வேறு ஒரு கட்சி பெற்றுள்ளது சரி தவறு என்பது தொடர்பாக பலர் விமர்சனம் செய்கிறார்கள்.
அதிலும் கூடுதலாக விமர்சனம் செய்பவர்களை கவனித்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிக்க பிரசாரம் செய்தவர்களே என்பதை உணரமுடிகிறது.
இதுவும் ஒருவகையில் திருப்தியளிக்கிறது ..

-பா.அரியநேத்திரன்-
03/09/2024
புதியது பழையவை