கட்டுநாயக்காவில் வந்திறங்கியவரும் கைது - அழைத்து செல்ல வந்தவர்களும் கைது!




கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய வளாகத்தில் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்கு வந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது நேற்று (26-10-2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஐஸ் போதைப்பொருளுடன் கைதான நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரிடமிருந்து 05 கிலோ 26 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய சந்தேக நபரை அழைத்துச் செல்ல காத்திருந்த கார் சாரதி மற்றும் காரில் சென்ற மற்றுமொரு பெண் ஆகிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் வேபோட மற்றும் வாதுவ பிரதேசங்களை சேர்ந்த 36, 33 வயதுடையவர்கள் ஆவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புதியது பழையவை