வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் பூஜையும்!அன்னதானமும்!



கிழக்கு மாகாணத்தின் வதனமார் வழிபாட்டுச்  சடங்கிகு இடம் பெறும் ஆலயமானது மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று வெல்லாவெளி கல்லடிப்பிள்ளையார் ஆலயமாகும்.

ஆலயத்தில் நேற்று(04-10-2024) வெள்ளிக்கிழமை போரதீவுப்பற்று பிரதேசசபை ஊழியர்கள் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெற்றமைக்கு ஆசி வேண்டி அன்னதானமும் பொங்கல் பூஜையும் இடம் பெற்றன.

வெல்லாவெளி கமநலகேந்திரநிலையம்(விவசாய திணைக்களம்) மற்றும் பொதுமக்கள் இன்றைய தினம் அன்னதானமும் பொங்கல் பூஜையும்  இடம்பெற்றன.

இன்றைய பூஜை வழிபாட்டிலும் அன்ன தான நிகழ்விலும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டமையினைக் காணக் கூடியதாக இருந்தன.






புதியது பழையவை