அம்பாறை சம்மாந்துறையில் குடியிருப்பு பகுதிகளை தாக்கிய யானை




அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் தனியன் யானை ஒன்று திடீரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (09-10-2024) காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 - குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டு காணிகளிலேயே சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 தினங்களாக தனியன் யானை ஒன்று சம்மாந்துறை நூலகம், குவாஸி நீதிமன்ற பகுதிகளில் அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டை முன்வைத்துள்ளனர்.


இந்நிலையில், சம்பந்தம்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதியது பழையவை