மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி ஆரம்பம்!




மாவீரர் நாளினை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும் முகமாக பணிக்குழுவினால் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.


இந் நிலையில் அதன் ஆரம்ப கட்டமாக சிரமதான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை