கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!



கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது (15-10-2024) நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் நாட்டிற்கு அவசியமான 7,50 000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்யவும் இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.


அதற்கமைய, ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை (19-10-2024) நாட்டை வந்தடையும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

எதிர்வரும் திங்கட்கிழமையாகும் போது நாட்டில் கடவுச்சீட்டுகள் இருப்பில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இணையவழி கடவுச் சீட்டு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை