அனுராதபுரம் - தலாவ பிரதேசத்தில் - ஏற்பட்ட பயங்கர விபத்து சம்பவம்!



அனுராதபுரம் - தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (05-10-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனியார் பேருந்து ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு பேருந்தை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை