பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்



மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஒவ்வொரு மாதமும் தமது கவன ஈர்ப்பை சர்வதேசத்துக்கு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் மட்டக்களப்பு பொலிஸாரினால் தடை செய்யப்பட்டு போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அமலநாயகி தலைமையில் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்படவிருந்த நிலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள்
தற்போது தேர்தல் காலம் என்ற நிலையில் மக்கள் ஒன்று கூடுவதையும் கூட்டம் போடுவதையும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்கள் செய்ய முடியாது என அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்தியுள்ளனர்.




இந்நிலையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள் காந்தி பூங்கா வளாக பகுதியில் ஒவ்வொரு இடங்களில் தனித்து நின்று தனது கவன ஈர்ப்பை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை