உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் அவர்களுக்கென்று ஒரு தினமும் வகுக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. அதுதான் சர்வதேச சிறுவர் தினமாகிய அக்டோபர் 1 ம் திகதியாகும்.
உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு அகிலன் பவுண்டேசன் ஊடாக மட்டகக்களப்பு போரதீவுப்பற்று வீரஞ்சேனை பாலர்பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் முகமாக போரதீவுப்பற்று பிரதேசசபை திருப்பழுகாமம் பொதுநூலகத்தில் நேற்று (01-10-2024) ஆம் திகதி இடம் பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.பகீரதன் இலங்கைக்கான அகிலன் பவுன்டேசன் இணைப்பாளரும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் ஆகிய வி.ஆர்.மகேந்திரன் JP.MAF, ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் சு.உதயகுமார் ஆகியோர் கலந்நது கொண்டதுடன் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் சனசமுக உத்தியோகஸ்தர், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் நூலக சேவகர்கள் ,பொது அமைப்புக்கள் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்கதாகும்.