மாவட்ட ரீதியாக தேர்தல் வாக்கு பதிவு விபரங்கள்




பத்தாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.

காலை வேளையில் அதிகளவான மக்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.

முற்பகல் 10.00 மணிவரையான காலப்பகுதியில்,

கொழும்பில் 20 வீத வாக்குகளும்,
களுத்துறையில் 20 வீத வாக்குகளும்,
நுவரெலியாவில் 20 வீத வாக்குகளும்
யாழ்ப்பாணத்தில் 16 வீத வாக்குகளும்,
கிளிநொச்சியில் 25 வீத வாக்குகளும்
முல்லைத்தீவில் 23 வீத வாக்குகளும் 
வவுனியாவில் 25 வீத வாக்குகளும்
கண்டியில் 20 வீத வாக்குகளும்
பதுளையில் 23 வீத வாக்குகளும்
இரத்தினபுரியில் 25 வீத வாக்குகளும்
மட்டக்களப்பில் 9 வீத வாக்குகளும்
திகாமடுல்லயில் 18 வீத வாக்குகளும்
பொலநறுவையில் 23 வாக்குகளும்
மொனராகலையில் 14 வீத வாக்குகளும்
குருணாகலில் 22 வீத வாக்குகளும்
மாத்தளையில் 24 வீத வாக்குகளும்
மாத்தறையில் 10 வீத வாக்குகளும்
புத்தளத்தில் 22 வீத வாக்குகளும்
மன்னாரில் 28 வீத வாக்குகளும்
அனுராதபுரத்தில் 25 வீத வாக்குகளும்
கம்பஹாவில் 20 வீத வாக்குகளும்
திருகோணமலையில் 23 வீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.




வாக்குச்சாவடி
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கு பதிவு இடம்பெறும்.

நேர தாமதமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல் ரட்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை