மாவீரர் நாள் உருவான வரலாறு..!



யாழ்ப்பாணம் வடமராச்சி கம்பர்மலையில்  1960,யூன்,16, ல் பிறந்த செல்வச்சந்திரன் சத்தியநாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து “சங்கர்” என்ற பெயரில் இயங்கிய நிலையில்  இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக இடம்பெற்ற கரந்தடி தாக்குதலில் காயமடைந்து இந்தியாவில் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 1982,நவம்பர்,27, அன்று மாலை 6மணி 5, நிமிடம்  மரணமடைந்தார் இவரே தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் முதன் முதலாக வீரச்சாவை தழுவிய போராளியாவார்.         

இவர் 1982, நவம்பர்27, ல் மரணம் அடைந்து சரியாக ஏழு வருடத்திற்கு பின்னர் 1989,நவம்பர்27, ம் திகதியில் இருந்துதான் விடுதலைப்புலிகளின் தலைவரால் அந்த “கார்த்திகை,27” ம் நாள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு தொடர்சியாக அது நினைவுகூரப்பட்டு வருகிறது.

முதலாவது மாவீரர் தினம் 1989, நவம்பர், 27,ல் நினைவுகூரப்பட்டது
அன்றய தினமே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால்  முதலாவது மாவீரர் தின உரையும் உத்தியோகபூர்வமாக நிகழ்த்தப்பட்டது அதனைதொடர்ந்து.      1989, கார்திகை 27ம் திகதில் இருந்து மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டுவருவதை நாம் அறிவோம். ஆனால் 
கடந்த 2008 கார்திகை 27,அன்றுதான் விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரனால் நிகழ்த்தப்பட்ட இறுதி மாவீர்ர் நாள் உரையாகும்.                            
அவர் 1989, தொடக்கம் 2008, வரை 20, தடவை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச்சுடர் ஏற்றியதுடன் 20, தடவை மாவீரர் நினைவு உரைகள் ஆற்றப்பட்டு அவருடைய குரல் பதிவுகளில் அந்த தினங்களில் சகல துயிலும் இல்லங்களிலும் ஒலிபரப்பபடுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.                              

2009, மே,18,ல் முள்ளிவாய்க்கால் போர் மௌனித்த பின்னர் 2009,நவம்பர், 27, தொடக்கம் எதிர்வரும் 2024, நவம்பர், 27, வரை 15, வருடங்கள் விடுதலைப்புலிகளால் மாவீரர் தினம் நினைவுகூரப்படாவிட்டாலும் அந்த நடைமுறையை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்மக்கள் தொடர்ச்சியாக அந்த நிகழ்வை உணர்வுபூர்வமாக துயிலும் இல்லங்களில் சென்று செய்து வருகின்றனர்.

அதேபோல் புலம்பெயர் நாடுகள், மத்தியகிழக்கு நாடுகள், தமிழ்நாடு என உலகப்பரப்பிலும் இது தொடர்ச்சியாக நினைவு கூரப்பட்டு வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றனவற்றினை உள்ளடக்கிய பிரதேசம் மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். இவற்றுள் 62 சதவீதமானவை விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களின் நிர்வாக கட்டமைப்பு இருந்த பகுதிகளிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 சதவீதமும், மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளில்  18 சதவீதமும், வவுனியா, திருகோணமலை மாவட்டங்களில் 4 சதவீதமும் 2009, மே,18, க்கு முன்னர் இருந்தன.                                                     

முள்ளிவாய்க்கால் போர்மௌனத்தின்பின்னர் சகல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இருந்த சகல நடுகை கற்களையும் இராணைவத்தினர் கனரக வாகனங்களை கொண்டு இடித்து தரை மட்டமாக்கியதுடன் அந்த இடத்தில் இராணுவ முகாம்களை சில துயிலும் இல்லங்களில் அமைத்தும் உள்ளனர்.

தொடர்சியான அச்சுறுத்தல்கள், தடைகளை தாண்டி மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினமான  கார்த்திகை 27, ம் (நவம்பர் 27)ம் திகதியன்று மாவீரர்களின் பெற்றோர் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளிற்கும், மாவீரர் துயிலும் இல்லங்களின் வளாகத்திலும் ஈகைச்சுடர் ஏற்றுவர். அதே வேளை அங்கமைந்திருக்கும் பிரத்தியேக சுடர் ஏற்றும் தளத்தில் பொதுச் சுடரினை விடுதலைப்புலிகளின் தளபதிகள் முன்பு ஏற்றி வந்தனர். ஆனால் தற்போது மாவீரர்களுடைய பெற்றோரில் ஒருவர் கார்த்திகை  27 மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடரினை ஏற்றுவார். அதனை தொடர்ந்து  வணக்கப்பாடல் ஒலிக்க சகலமக்களும் துயிலும் இல்ல வளாகத்தில் தயார் நிலையில் இருக்கும் கம்பங்களில் அமைதியாக விள்கேற்றி வணக்கம் செலுத்துவார்கள். 

இதுவரை வடக்கு கிழக்கு தாயக நிலப்பரப்பில் மொத்தமாக 33, மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்தன.

2008, நவம்பர்,27, வரை  27, துயிலும் இல்லங்கள் மட்டுமே இருந்தன ஆனால் 2008, நவம்பர், 27 தொடக்கம் 2009, மே,18, இறுதி உக்கிரமான போர் வன்னி நிலப்பரப்பில் ஏற்பட்டபோது மேலதிகமாக 06, துயிலும் இல்லங்கள் மேலும் ஏற்படுத்தப்பட்டன.

மாவீரர் துயிலுமில்லங்கள் விபரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் (5, துயிலும் இல்லங்கள் ) சாட்டி தீவகம் மாவீரர்துயிலுமில்லம்.  கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்,எல்லங்குளம்மாவீரரதுயிலுமில்லம்,கொடிகாமம்மாவீரர்துயிலுமில்லம்,  உடுத்துறைமாவீரர்துயிலுமில்லம்.ஆகிய ஐந்து துயிலும் இல்லங்களும்,

கிளிநொச்சி மாவட்டம்.(3,துயிலும் இல்லங்கள்)        கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்,விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்,முழங்காவில் மாவீரரதுயிலும்இல்லம் ஆகிய மூன்று துயிலும் இல்லங்களும்,   

முல்லைத்தீவு மாவட்டம்.(5,துயிலும் இல்லங்கள்)       முள்ளியவளை துயிலுமில்லம்,அலம்பில் துயிலுமில்லம், ஆலங்குளம் மாவீரர்              துயிலுமில்லம்,வன்னிவிளாங்குளம் மாவீரர்துயிலுமில்லம்,களிக்காடு (நெடுங்கேணி) மாவீரர் துயிலுமில்லம் ஆகிய ஐந்து துயிலும் இல்லங்களும்,
    
மன்னார் மாவட்டம்.(2,துயிலும் இல்லங்கள்)        ஆட்காட்டிவெளிமாவீரர்துயிலுமில்லம்,பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் ஆகிய இரண்டு துயிலும் இல்லங்களும்,           

வவுனியா மாவட்டம். (1, துயிலும் இல்லம்)       ஈச்சங்குளம்மாவீரரதுயிலுமில்லமும் 
       
மணலாறு பிரதேசம். (2,துயிலும் இல்லங்கள்)                          உதயபீடம் (டடி முகாம்) மாவீரர் துயிலுமில்லம்,                                         இதயபீடம் (ஜீவன் முகாம்) மாவீரர் துயிலுமில்லம் ஆகிய இரண்டு துயிலும் இல்லங்களும்
   
திருகோணமலை மாவட்டம்.  (4,துயிலும் இல்லங்கள்) ஆழங்குளம்மாவீரர்துயிலுமில்லம்,                           தியாகவனமமாவீரரதுயிலுமில்லம்.                             பெரியகுளம்மாவீரரதுயிலுமில்லம்,உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.  ஆகிய்நான்கு துயிலும் இல்லங்களும்

மட்டக்களப்பு மாவட்டம். (4,துயிலும் இல்லங்கள்)                                                       தரவை மாவீரர் துயிலுமில்லம்,தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்,                                  வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்,                         மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லம்.   ஆகிய நான்கு துயிலும் இல்லங்களும்,

அம்பாறை மாவட்டம். (1,துயிலும் இல்லம்).              கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லமுமாக மொத்தம் 27 துயிலும் இல்லங்கள் மட்டுமே 
2008 இறுதிவரை இருந்தது. இருந்தன.


போர் உக்கிரமான போது 2008 நவம்பர் 27, க்கு பின்னர் அமைக்கப்பட்ட ஆறுமாவீரர் துயிலுமில்லங்கள் .. 
தர்மபுரம் மாவீரர் துயிலுமில்லம்,சுதந்திரபுரம் மாவீரர் துயிலுமில்லம்.  இரணைப்பாளை மாவீரர் துயிலுமில்லம்.  பச்சைப்புல்வெளி மாவீரர் துயிலுமில்லம.  கரையா முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம். வெள்ளா முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம்.இவை இறுதிப்போர் 2009, மே,18 வரை முல்லைத்தீவு அமைக்கப்பட்டன. எல்லாமாக மொத்தம் 33, துயிலும் இல்லங்களில் இதுவரை ஏறக்குறைய ஐம்பதாயிரம் மாவீரர்களின் உடலங்கள் விதைக்கப்பட்டதாக  அறியமுடிகிறது.

இதேவேளை தற்போதும் பத்து துயிலும் இல்லங்களில் இராணுவமுகாம்கள் உள்ளன.
அவை..

*மட்டக்களப்பு மாவட்டம்:
தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லம்.
*யாழ்ப்பாணம் மாவட்டம்:
கொடிகாமம் துயிலும் இல்லம்,
எள்ளாங்குளம் துயிலும் இல்லம்,
கோப்பாய் துயிலும் இல்லம்
*வவுனியா மாவட்டம்:
ஈச்சங்குளம் துயிலும் இல்லம் 
*முல்லைத்தீவு மாவட்டம்:
சேராவில் துயிலும் இல்லம்,
முள்ளியவலை துயிலும் இல்லம்
அடம்பன் துயிலும் இல்லம்,
துணுக்காய் துயிலும் இல்லம்,
ஆலங்குளாய் துயிலும் இல்லம்.

கடந்த காலங்களில் எல்லாம் பல தடைகள்,நீதிமன்ற கட்டளைகள்,எச்சரிக்கைகள், கைதுகள், என பல நெருக்கடிகளை சந்தித்து கார்திகை 27, ல் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றி நினைவுகூரப்பட்டது.

இம்முறையும் வழமை போன்று துயிலும் இல்லங்களில் நினைவு வணக்கம் இடம்பெறும்.

-பா.அரியநேத்திரன்-
23/11/2024
புதியது பழையவை