சிறிய ரக படகொன்று மற்ற படகுடன் மோதி கவிழ்ந்ததில் தந்தை, மகள் என இருவர் காணாமல்போன சம்பவம் இன்று (24-11-2024) காலை இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு முன்னக்கரை களப்பு பகுதியில் 7 பேர் பயணித்த இப்படகு கவிழ்ந்ததையடுத்து, 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 50 வயதுடைய தந்தையும் 20 வயது மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர்களில் மூவர் சிகிச்சை பெற்றுக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும் காணாமல்போன தந்தையையும் மகளையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.