கொட்டும் மழைக்கு மத்தியில் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி



மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் காவல்துறை பிரிவுட்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (27-11-2024) இம் திகதி மாலை 6.05 மணிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி சொலுத்தினர்.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாவீரர் ஒருவரின் தாய் பொதுச் சுடரை ஏற்றிவைக்க ஏனைய சுடர்களை கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர்மல்க கொட்டும் மழைக்கு மத்தியில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

புதியது பழையவை