அநுர அலையில் தனித்து நிற்கும் மட்டக்களப்பு - பா.அரியநேத்திரன்



மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறு எந்த கட்சிகளும்  முன்னிலை பெற்றதாக வரலாறு இல்லை  என பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,


விகிதாசாரத்தேர்தல் அறிமுகமான 1989, தொடக்கம் கடந்த 2024, வரை நடைபெற்ற 09, பொதுத்தேர்தல்களில் இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இரண்டு ஆசனங்கள் தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் தமிழ்த்தேசி கூட்டமைப்புக்கு கிடைத்தன (2000,2020) ஏனைய அனைத்து தேர்தல்களிலும் தொடர்சியாக மூன்று ஆசனங்களை நாம் பெற்றதே வரலாறு அதில் 2004, தேர்தலில் மட்டும் நான்கு ஆசனங்களை பெற்றோம்..!  

இதுதான் விபரம் கீழே தரப்பட்டுள்ளது,

1. 1989, ம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி 55,141, வாக்குகளை பெற்று 03, ஆசனங்கள்,

2. 1994,ம் ஆண்டு 76,516, வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்கள்,

3. 2000, ம் ஆண்டு 54,448, வாக்குகளைப்பெற்று 02,ஆசனங்கள்,

4. 2001, ம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவான பின்னர் 86,284,ஆசனங்களைப்பெற்று 03, ஆசனங்கள்.

5. 2004,ம் ஆண்டு 1,61,011, வாக்குகளை பெற்று 04, ஆசனங்கள்,

6. 2010, ம் ஆண்டு 66,235,வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்கள்

7. 2015, ம் ஆண்டு 1,27,185, வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்கள்,

8. 2020, ம் ஆண்டு 79460, வாக்குகளை பெற்று 02, ஆசனங்கள்

9. 2024,ம் ஆண்டு 96,975, வாக்குகளை பெற்று 03, ஆசனங்கள்


மட்டக்களப்பில் கடந்த ஒன்பது விகிதாசாரத்தேர்களிலும் வழமை போன்று முதன்நிலை கிடைத்தன. எந்த ஒரு தேர்தலிலும் தமிழர்விடுதலை கூட்டணி,  இலங்கை தமிழரசு கட்சியை விட வேறு எந்த கட்சிகளும் மட்டக்களப்பில் முன்னிலை பெறவில்லை என்பதே மட்டக்களப்பில் கடந்த எட்டு விகிதாசாரத்தேர்களிலும் நாம் கண்ட வரலாற்று உண்மை.

யாரை வேட்பாளர்களாக நிறுத்தினாலும் தொடர்ச்சியாக முடிவுகள் இவ்வாறே மட்டக்களப்பில் அமைந்தன

ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1994, தேர்தலில் தமிழீழ விடுதலைப்புலிகள் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறியதால் ஈபிடிபி முன்னிலை பெற்றது, (இந்த ஆண்டுதான் டக்லஷ்தேவானந்தா 11, விருப்பு வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி தொடர்சியாக 30வருடங்கள் பாராளுமன்ற பதவியில் இருந்தவர்.

இந்த தடைவைதான் தோற்கடிக்கப்பட்டார்) அதுபோல் 2024, தற்போதய தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்பாணத்தில் முன்னிலை பெற்றுள்ளது.ஏனைய ஏழு தேர்தல்களிலும் யாழ்மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதன்நிலை பெற்ற வரலாறே இருந்தது.
புதியது பழையவை