இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
அந்தவகையில் தென்கிழக்கு வங்க கடலில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது இலங்கையை கடக்கும் நிலையில் இந்த தாக்கமானது மக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இதில் யாழ். உட்பட பல மாவட்டங்களுக்கு கடலின் சீற்றமானது ஆபத்தாக மாறும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படகிறது.
இந்நிலையில் இந்த தாக்கமானது புயலாக மாறுமாக இருந்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய சேதங்கள் ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நா. பிரதீபராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.