காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த 23 வயதுடைய முன்னாள் இராணுவ பெண் சிப்பாயை கொட்டனால் அடித்து கொன்ற, பாண் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை இரத்தினபுரி சிறிபாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவல, கிலிமலே வெலேகொட வீதியில் கடந்த 04 ம் திகதி காலை 7.30 மணியளவில் யுவதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு தலைக்காதலன் கொட்டனால் யுவதியின் தலை மற்றும் உடம்பில் அடித்தான். யுவதி இரத்தக் காயங்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம். அஹிம்சா சமன்மாலி என்ற இந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.