தாழமுக்கமும் வடகிழ் பருவப் பெயர்ச்சிக் காலமும்



தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்க பகுதியானது தற்போது 
கல்முனையில் இருந்து கிட்டத்தட்ட 800km தூரத்திலும், 
திருகோணமலையிலிருந்து கிட்டத்தட்ட 900km தூரத்திலும் 
நாகப்பட்டினத்தில் இருந்து 1150km தூரத்திலும், 
1300kmசென்னையிலிருந்து தூரத்திலும் 
இலங்கையின் தென்கிழக்காக காணப்படுகின்றது.

இதேவேளை இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் இன்று (08.12.2024) காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான வானிலை முன்னறிவிப்பு


தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக உருவாகியுள்ள தாழமுக்க பகுதியானது, அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் இது எதிர்வரும் 11ஆம் திகதியளவில் இலங்கைக்கு அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தை வந்தடையும்.

இதன் தாக்கத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை கொண்ட காலநிலை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே வேளை வடகிழக்கு பருவப் பெயர்ச்சி பருவகாலமானது மேற்குறிப்பிடப்பட்ட நிலையுடன் படிப்படியாக விரித்தியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

க.சூரிய குமாரன்,
 சிரேஷ்ட வானிலை அதிகாரி.
புதியது பழையவை