ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மீது தொடுக்கப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 நவம்பர் 24ம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற மாவீரர் குடும்ப உறவுகள் கௌரவிப்பு நிகழ்வினை மேற்கொண்டிருந்த போது பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகாக்கூறி இவர் வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு சிறைச்சாலை
சுமார் இரண்டு மாதங்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக குறித்த வழக்குக் கோவை அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் அழைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைவாக வழக்கில் இருந்து நகுலேஸ் முற்றாக விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.