மட்டக்களப்பில் வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணை இரண்டாக உடைத்த வேன்



மட்டக்களப்பு பிள்ளையாரடி சர்வோதய வீதியால் பயணித்த வேன் நேற்று இரவு(26-01-2025) வீதியை விட்டு விலகிச் சென்று பிரதான வீதியோரத்திலுள்ள மின்சார தூண் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் இருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விபத்தால் தூண் இரண்டாக முறிந்து வீதியின் குறுக்காக சாய்ந்ததால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டதுடன் பிரதேசத்திற்கான மின்சாரமும் தடைப்பட்டது.



இவ் விபத்தில் சிக்கி வேனின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பில் கொக்குவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர்.
புதியது பழையவை