ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி பாலத்திற்கருகாமையில் நேற்றிரவு 11:15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், தெய்வாதீனமாக எவருக்கும் ஆபத்தில்லை.
பாதையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனத்தில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த காரொன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
பட்டா ரக வாகனத்தில் எவரும் இருக்கவில்லை என்பதுடன். காரில் பயணித்தவர்களும் தெய்வாதீனமாக எவ்வித ஆபத்துமின்றி தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.