மதுபான சாலை எமக்கு வேண்டாம்- தும்புத்தடிகளுடன் பெண்கள் போராட்டம்



அம்பாறை பெரிய நீலாவணையில்  மதுபான சாலை வேண்டாம் என  எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஒன்றுகூடி தும்புத்தடிகள்  ஏந்தி நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று (21-01-2025)  கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய பெண்கள் உட்பட பொதுமக்கள்  பெரிய நீலாவணை பகுதியில்  புதிய  மதுபானசாலை  வேண்டாம் என   தும்புத்தடிகள் ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.




பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த  வடக்கு பிரதேச செயலாளர்   ரி.ஜே அதிசயராஜிடம்   மகஜர் ஒன்றினை  வழங்கினர்.பின்னர் போராட்டம் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை