இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை எப்படி நடத்தப்படுகிறது என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட ஆடைகளை அணிந்த பணியாளர்களால் இந்த மசாஜ் சேவை வழங்கப்படுகிறது. காணொளியில் பதிவாகியுள்ள நபர் சிங்களத்தில் பேசுவதைக் கேட்கக் கூடியதாக உள்ளது.
இந்த சேவை தற்போது இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு ரயில் பெட்டிகளில் வழங்கப்பட்டு வருவதாகவும் சமூகவலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.