திருகோணமலை -அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் சீமெந்து கலவையை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (06-01-2025) காலை இடம்பெற்றுள்ளது.
சீமெந்து கலவையை ஏற்றிக் கொண்டு பயணித்த இவ் வாகனம் புரண்டு விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த சாரதியும் உதவியாளரும் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.