ஓட்டமாவடி - கொழும்பு வீதியில் பஸ் வண்டி மீது யானை தாக்குதல்!



மட்டக்களப்பு ஓட்டமாவடி - தியாவட்டவான் பகுதியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ளது.

அவ் வீதியால் பயணித்த தனியார் பஸ் வண்டி மீதே இத்தாக்குதல் நேற்று இரவு (28-01-2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் பஸ் வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் செயற்பாடுகளில் கல்குடா அனர்த்த அவசர உதவிச்சேவை குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
புதியது பழையவை